ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு

Forums Inmathi News ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6335
    Kalyanaraman M
    Keymaster

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்ற காரணத்தைக் கூறி, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தனர். அப்போது,  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை வரும் 17ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This