இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும், காரில் செல்லும் அனைவரும் சீட்பெல்ட் அணியவேண்டும். பைசைக்கிளில் செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கும், காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுந்தர் ஹெல்மெட் அணியும் சட்டத்தை திருத்த கோரி தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இனி அனைவரும் ஹெல்மெட் அணிய உத்தரவிட்டுள்ளது. இதை முதலில் காவல் துறையினர் பின்பற்றுமாறு அறிவுறுத்தியது.