தீபாவளி பண்டிகைக்காக அதிவிரைவு ராயிலிற்க்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 8.02க்கு முடிவடைந்தது. 80% சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவிற்கு திறக்கப்படும். இந்நிலையில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மார்கங்களுக்கு முன்பதிவு தொடங்கியது. அதிகபட்சமாக எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியல் 1100 ஆகவும், மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸின் காத்திருப்பு பட்டியல் 330ஆக உள்ளது.
இந்நிலையில், நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளுக்கு முன்பதிவு நாளை மற்றும் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. விரைவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் – தென்னக ரயில்வே அதிகாரி.
Source : Puthiyathalaimurai TV