கேரளா மாநிலம் விழிஞம் துறைமுக திட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம் தொட்டியோடு அடுத்த தேவிக்கோடு மலைப்பகுதியிலிருந்து கற்கள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக தேங்காய்ப்பட்டினம் மீன்புடி துறைமுகம் வாயிலாக கற்களை கொண்டு செல்ல கருத்து கேட்கும் கூட்டம் மீன்வள துறை அதிகாரிகளால் அழைப்பு விட்டிருந்தனர். ஆனால், அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கவே, கலெக்டர் அக்கூடத்தை ரத்து செய்தார். இந்நிலையில் அதானி குழுமம் கன்னியாகுமரியிலிருந்து கற்களை எடுக்கும் திட்டத்தை ரத்து செய்து கேரளா மாநிலம் பட்டனம்திட்டா மலைப்பகுதியிலிருந்து கற்கள் எடுக்க முடிவு.