விவசாயிகளின் வீடு தேடி வரும் “உழவன் செல்லிடப்பேசி செயலி’’ சேவை

Forums Communities Farmers விவசாயிகளின் வீடு தேடி வரும் “உழவன் செல்லிடப்பேசி செயலி’’ சேவை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6296
  madhu balan
  Participant

  விவசாயிகளுக்கு வீடு தேடி வரும்  நவீனத் தொழில்நுட்பமான “உழவன் செல்லிடப்பேசி செயலி’’ மூலமாக  ஒன்பது  வகையான சேவைகள் கிடைக்கப்படுகின்றன விவசாயிகள் நேரடியாக செல்லிடப்பேசி மூலமாக பல்வேறு சேவைகளை பெறும் விதத்தில் உழவன் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாய செய்திகளை விவசாயிகளும், பொதுமக்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் விதத்தில் தமிழக அரசு சமீபத்தில் உழவன் எனும் செல்லிடப்பேசி செயலியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளது.

  இதில் வேளாண்மைத்துறையின் மானியத் திட்டங்கள், இடுபொருட்களுக்கு முன்பதிவு செய்தல், பயிர்க்காப்பீட்டுத் தி;ட்டம், கடை வாரியாக உரம், விதை, பூச்சி மருந்துகள் இருப்பு விவரம், வானிலை முன்னறிவிப்பு, வேளாண்மை இயந்;திரங்கள், வாடகை விபரம், கிராம வாரியாக உதவி வேளாண்மை அலுவலர்களின் வருகை உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட சேவைகள் அடங்கியுள்ளன. இதனை குறித்து தருமபுரி வேளாண்மை இணை இயக்குனர் திருமதி சுசீலா தெரிவித்த விவரங்கள்

  இந்த உழவன் செல்லிடப்பேசி செயலி வசதியை ஆண்ட்ராய்டு வகை செல்லிடப்பேசிகளில் இருந்து அனைத்து விவசாயிகளும் எளிமையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தருமபுரிமாவட்டத்தில் இதுவரை 7800 உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். இதன் மூலமாக இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஏராளமான விவசாயச் செய்திகளை ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில் நுட்பத்தை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திப பயனடையலாம். மேலும், வேளாண்மைத்துறை மூலமாக நடைபெறும் அனைத்துப்பயிற்சிகளிலும், கூட்டங்களிலும் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்வது குறித்த செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த வசதியை பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் இதுதொடர்பான தகவல்களுக்கு தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

  எனது பெயர்பூபதி . நான் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரத்தில் என் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். வேளாண்மை செய்வதற்கு தேவையான கருவிகள், உரம் மற்றும் விதைபொருட்கள், போன்றவற்றை வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தேன.; ஒவ்வொரு முறை இவற்றை வாங்குவதற்கு வேளாண்மை அலுவலகத்திற்க்கு செல்லவேண்டியது இருந்தது.  மேலும், சில நேரங்களில் வேளாண்மை துறைக்கு சென்றாலும் நான் போகும் நாளில் உரம் அல்லது விதைபொருட்கள் இருப்பு காலியாகிவிடும் அந்த நேரங்களில் எனக்கு வீணான அலைச்சல்  மற்றும் பண விரயம் ஏற்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மைத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள “உழவன் செயலி” மூலம் 9 விதமான விவசாய சேவைகளை பயன்படுத்தி அனைத்து விவரங்களை என்னுடைய கைப்பேசியின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது. இதன் மூலம் எனக்கு தேவையான தகவல்களை உடனே பெறவும் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு உதவியாக உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு எங்கள் கிராம விவசாயிகள் சார்பாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  கைப்பேசியின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது. வருங்கால சந்ததியினரும்  வேளாண்மை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள உதவியாக உள்ள இந்த செயலி அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு நானும் எனது குடும்பமும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This