ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 12 பேர் நேற்று மாலை தங்கட்சிமடத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவருடைய விசைப்படகிலும், ரமேஸ்வரத்தை சேர்ந்த தேவதாஸ் என்பவருடைய விசைப்படகிலும் 6 பேர் வீதம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் 12 நாட்டிகள் மையில் தொலைவில் தனுஷ்கோடிக்கும் கட்சத்தீவிற்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது இரவு 2 மணி அளவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 12 பேரை கைது செய்ததுடன், படகுகளையும் பறிமுதல் செய்து மன்னாருக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளேயே மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்று படகு உரிமையாளர் தேவதாஸ் கூறுகிறார்.
Source : ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்கம்