மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், காமராஜர் பெயரில் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராமசாமி முன்வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், காமராஜர் இருக்கை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், CENTRE FOR KAMARAJ STUDIES என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.