டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சாதாரண நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி, ரூ.1,750 ஆக நிர்ணயம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதல் தர நெல்லுக்கான குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தி ரூ.1,770 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ஒன்றரை மடங்கு உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை.
சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.275 ரூபாய் உயர்த்தி ரூ. 1700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும்.