தூத்துக்குடியில் மீன்களில் பார்மாலின் கலக்கப்படுகிறதா என அதிகாரிகள் திடீர் சோதனை

Forums Communities Fishermen தூத்துக்குடியில் மீன்களில் பார்மாலின் கலக்கப்படுகிறதா என அதிகாரிகள் திடீர் சோதனை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6237

  கேரளாவில் சமீபத்தில் பார்மாலின் கலக்கப்பட்ட 14 டன் மீன்களை உணவுப்  பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி  அழித்தனர். இந்த மீன்கள் தூத்துக்குடியிலிருந்து வந்தவை என்ற சந்தேகத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆங்காங்கே  திடீர் சோதனை நடத்திவருகின்றனர்.

  இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் விற்பனை செய்யும் பகுதிகளில்  அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள் அங்குள்ள மீன் ஏலக் கூடத்தில் உள்ள மீன்களை சோதனை செய்தனர். தொடர்ந்து அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்கள், வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக அந்த பகுதியில் உள்ள 2 நிறுவனங்களில் ஐஸ் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த 2 நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிவதற்கான பிரத்யேக கருவி மூலம் சோதனை செய்தனர். ஆய்வில் பார்மலின் ரசாயனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.

  மற்றொரு நிறுவனத்தில் சோதனையின் போது, அங்கிருந்த சுமார் 150 கிலோ அழுகிய மீன்கள் கைப்பற்றப்பட்டன.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேல் பரிசோதனைக்காக அங்கு இருந்து ஏராளமான மாதிரிகளையும் சேகரித்து உள்ளனர்.

  அந்த மாதிரிகள் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படும் என்றும், இது போன்று சோதனைகள் மேலும் பல இடங்களில் நடத்தப்படும்  எனவும் மீன் வளத்துறை உதவி இயக்குனர் பாலசரசுவதி கூறினார்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This