நிலக்கடலையில் எளிமையான மகசூல் எடுக்கும் வழிகள்

Forums Communities Farmers நிலக்கடலையில் எளிமையான மகசூல் எடுக்கும் வழிகள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6221
  madhu balan
  Participant

  நிலக்கடலையில் எளிமையான மகசூல் எடுக்கும் வழிகள்

  கடலை விதைக்கும் போதே தட்டப்பயறு மற்றும் உளுந்து விதைகளை வரப்பு மற்றும் பாத்திகளின் ஓரங்களில் விதைத்து விடுங்கள்.
  பூச்சிகளின் பிரதானப் பயிராக அவைகள் அமைந்து விடுவதால் கடலைச் செடிகளுக்கு பூச்சிகள் வருவதில்லை..

  இப்படி செய்ததன் மூலம்  கூட பூச்சி விரட்டி கூட அடித்ததில்லை..

  கூடுதல் தகவல் :

  விதைத்ததிலிருந்து 10 முதல் 15 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும்.

  பூக்கும் தருவாயில் இரண்டாவது களை எடுத்து மண் அணைக்க வேண்டும், மண் அணைப்பதன் மூலம் பூக்களில் இருந்து அதிகமான விழுதுகள் மண்ணில் இறங்குவதன் மூலம் அதிகமான கடலைகள் கிடைக்கும்.

  பாசனத்தின் போது இயன்ற வரை இயற்கை இடுபொருட்களான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா அல்லது EM கரைசல் ஆகியவற்றில் எதாவது ஒன்றைக் கொடுத்து வருவதன் மூலம் மண் வளமாக மாறுவதோடு நல்ல மகசூலும் கிடைக்க வாய்ப்பாக அமையும்..

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This