வரத்து அதிகமானதால் கருவாடாக்கப்படும் நெத்திலி மீன்கள்

Forums Communities Fishermen வரத்து அதிகமானதால் கருவாடாக்கப்படும் நெத்திலி மீன்கள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6186

    குளச்சலில் நெத்திலி மீன்கள் வரத்து அதிகமானதால் அவை கருவாட்டிற்காக உலர்த்தப்பட்டு வருகிறது.குளச்சல் கடல் பகுதியில்  300 விசைப்படகுகள், 1000க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. கடந்த வாரம் குளச்சலில் மீன் வரத்து குறைந்ததால் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் நேற்று  வள்ளம், கட்டுமரங்களில்  அதிகமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து ஏலமிட்டு விற்பனை செய்தனர். 20 கிலோ எடை கொண்ட ஒரு குட்டை நெத்திலி மீன்கள் தலா 400க்கு  விலைக்கு போனது. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு 1000 முதல் 1500 வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று குளச்சலில்  நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைத்தும், விலை குறைந்ததால்  மீனவர்கள் அவற்றை விற்காமல் கருவாட்டிற்காக மணற்பரப்பில் உலர வைத்தனர். நெத்திலி கருவாட்டிற்கு அதிக விலை கிடைக்கும் என்பதால் அதை கருவாடு ஆக்கும் ஆர்வத்தில் மீனவர்கள் ஈடுப்பட்டனர்.  அவற்றை மணற்பரப்பில் பரப்பி கருவாட்டிற்காக உலர்த்தி வருவதாக மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆன்றோ கூறுகிறார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This