மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் வீழ்ச்சி

Forums Communities Fishermen மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் வீழ்ச்சி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #6185

    வேதாரண்யத்தில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக அதிகளவில் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. அகஸ்தியன் பள்ளி , கடினல் வயல் உள்ளிட்ட பகுதிகளில் 10000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதியில் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.  ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை உற்பத்தி செய்யப்படும் உப்புகள் மூலம் இப்பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர் சங்க பொறுப்பாளர், கதிரவன் கூறுகிறார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This