சவுக்கு நாற்றங்கால் மூலம் லாபம் சம்பாதிக்கும் என்ஜினியர்

Forums Communities Farmers சவுக்கு நாற்றங்கால் மூலம் லாபம் சம்பாதிக்கும் என்ஜினியர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6184

  சவுக்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்து பல லட்சங்களை சம்பாதித்தி வருகிறார் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பி.சகிதிவேல். இவர் எம்.இ என்ஜினியரிங்  படித்து கல்லூரியில்வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால், சவுக்கு விவசாயத்தின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டார். அவருடைய பெற்றோர் நர்சரி மூலம் மா, கொய்யா, மாதுளம் போன்றவற்றை உற்பத்தி செய்து அதனை விறபனையும் செய்து வந்தனர்.

  பெற்றோரின் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த போது சவுக்கு மரத்துக்கு அதிக தேவையும் லாபமும் உள்ளது என்பதை செய்திதாளில் படித்திருக்கிறார் சக்திவேல். அதனையடுத்து அவர் முழு மூச்சாக இந்த தோழிலில் இறங்கியுள்ளார்.

  வன ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய சி.ஹெச்1, சி.ஹெச் 5 ஆகிய ரகங்களில் 500 கன்றுகளை வாங்கி அதிலிருந்து லட்சம் கன்றுகளைகுளோனிங் முறை மூலம் பெருக்கி அதனை விறபனைசெய்து வருகிறார்.

  குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளில் சவுக்கு விவசாயம் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து வரும் விவசாயிகளுக்கு கன்றுகளை கொடுக்கிறார். சவுக்கில் சி.ஹெச்1, சி.ஹெச் 5  ஆகிய இரண்டு ரகங்களும் இரண்டு வருடத்திலேயே அறுவடைக்குத் தயாராவதால் ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் செலவு செய்தால் 3 லட்சம் ரூபாய் கிடைப்பது உறுதியாகிறது என்கிறார் சக்திவேல்.

  தொடர்புக்கு: பி.சக்திவேல் -9159705868

  நமது ஆசிரியர் எம்.ஜெ.பிரபு தூர்தர்ஷனுக்காக கண்ட நேர்காணல்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This