இயற்கை இடுபொருள்களை இடுவதில் அளவு தேவையில்லை – வேளாண் அதிகாரி மதுபாலன்

Forums Communities Farmers இயற்கை இடுபொருள்களை இடுவதில் அளவு தேவையில்லை – வேளாண் அதிகாரி மதுபாலன்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6170
  madhu balan
  Participant

  வணக்கம்
  இயற்கை இடுபொருள்களை ஏக்கருக்கு இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டும் என்ற அளவீடுகள் தேவையில்லை, தெளிப்புக்கு பயன்படுத்துபோது மட்டும் குறிப்பிட்ட அளவுகளை பின்பற்ற வேண்டும்.

  #நிலத்திற்கு ஒவ்வோர் முறை நீர் பாய்ச்சும்போதும் ஜீவாமிர்தம் கலந்து பாசனம் செய்யலாம்.

  #ஒவ்வோர் ஜீவாமிர்தம் கலந்த பாசனத்தின் கூட மீன்அமிலம், பஞ்சகவியம், இஎம் என மாற்றி, மாற்றி கலந்து அனுப்பலாம்.

  #ஒவ்வோர் பண்ணைகளிலும், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தலும், அவ்விடுபொருட்கள் பாசனத்தில் கலக்க செய்வதையும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும்.இது போன்ற நிலையான அமைப்பை நிறுவுதல் மிகவும் இன்றியமையாதது.

  இயற்கை இடுபொருட்களை தெளிப்புக்கு பயன்படுத்தும் விகிதம் :
  *ஜீவாமிர்தம்*
  10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர்.

  *மீன்அமிலம்*
  10 லி தண்ணீர் : 150 மில்லி.

  *பஞ்சகவியம்*
  10 லி : 300 மில்லி ( கீரைகளுக்கு 150 மில்லி)

  *இஎம்*
  10 லி ; 50 மில்லி.

  *தேமோர்கரைசல்*
  10 லி ; 1லிட்டர்.

  *அரப்புமோர் கரைசல்*
  10 லி ; 1லிட்டர்

  *முட்டை,* *சின்னவெங்காய* *கரைசல்*
  10 லி ; 100 மில்லி + 50கிராம் சூடோமோனஸ் + 50 கிராம் வசம்பு.

  ( முட்டை வெங்காய கரைசலால், தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் அழுகாமல், மீண்டும் இலைகளில் சிறப்பான பச்சையம் நிலைநிறுத்தப்படுகிறது.)

  *மூலிகை பூச்சிவிரட்டி*
  10 லி ; 1 லிட்டர்.

  *அக்னிஅஸ்திரம்*
  10 லி : 500 மில்லி.

  *பொன்னீம்*
  10 லி ; 50 மில்லி.
  *வேப்பெண்ணெய்*
  10 லி ; 50 மில்லி +20 கிராம் காதிசோப்.
  *வேப்பங்கொட்டை* *கரைசல்.*
  10 லி ; 500 மில்லி.

  *சூடோமோனஸ்*
  10 லி ; 100 கிராம்.

  சிறப்பான, தொடர் இடுபொருள் நிர்வாக மேலாண்மையால், உயிர் பூஞ்ஞான கொல்லிகள் மற்றும் உயிர்உரங்களின் பயன்பாடுகள் எங்கள் பண்ணையின் நடைமுறையில் இல்லை.

  வேரிலும், இலைகளிலும் சூடோமோனஸ் பயன்பாடு கட்டாயம் உண்டு.இதனால் பயிரின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒளிச்சேர்க்கையின் அடித்தளமான இலைகளின் பச்சையத்தையும், வேரின் செயல்பாட்டையும், சூடோமோனஸ் நிலைநிறுத்துகிறது.

  தொடர்ச்சியான,
  ஒருங்கிணைந்த இயற்கை இடுபொருட்கள் பயன்பாடு மண்வளத்தை மேம்படுத்துவதோடு, பண்ணையின் நடைமுறை செலவுகளையும் முக்கால் சதவிகிதம் குறைக்கிறது.

   

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This