சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வில் நடந்த அநீதியை கண்டித்து கடந்த 30.6.2018 (சனிக்கிழமை) அன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.திங்கட்கிழமை (2.7.2018) உயரதிகாரிகளிடம் பேசி தீர்க்கலாம் என்று நிர்வாகம் சொன்னதன் அடிப்படையில் சனிக்கிழமை போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.இன்று ( 2.7.2018) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு போனபோது, ஊழியர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் முற்றிலும் நிராகரித்து விட்டது. இதைத்தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை நிர்வாக அலுவலகம் எதிரில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தை மெட்ரோ ரயில் ஊழியர்கள் துவங்கி உள்ளனர்.