ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி தொடங்கியது

Forums Inmathi News ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி தொடங்கியது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6104
  Kalyanaraman M
  Keymaster

  ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் உள்ள பாஸ்பரிக் அமிலம், கந்தக அமிலம், எல்.பி.ஜி, டீசல், ஜிப்சம், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், தாமிர தாது உள்ளிட்ட பொருட்களை அகற்றும் பணி இன்று தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
  இந்த பணி, 30 தினங்களுக்குள் நிறைவுபெறும் எனவும் அவர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதிகளவில் ஜிப்சம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டு இருப்பதால், அதனை அகற்ற கூடுதல் காலஅவகாசம் ஆகலாம் எனவும் சந்தீப் நந்தூரி குறிப்பிட்டார். இதற்காக மாவட்ட அளவிலான உயரதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This