காவிரி மேலாண்மை வாரியக் கூட்டம் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பித்தது. சுமார் 4 மணிநேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு 30 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது மேடூர் அணையில் 60 அடி நீர் நிரம்பியுள்ள நிலையில் கர்நாடக அரசு 30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து குறுவைப் பயிருக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஜூலை-ஆகஸ்ட்டில் 80 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதில் ஜூலையில் மட்டும் 30 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். இந்த காவிரி ஆணைய கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.இதில் தமிழக அரசின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு 30 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது.