இலங்கைக்கு கள்ளப்படகு மூலம் அகதிகள் தப்பி செல்ல உதவிய இடைத்தரகர்கள் கைது

Forums Communities Fishermen இலங்கைக்கு கள்ளப்படகு மூலம் அகதிகள் தப்பி செல்ல உதவிய இடைத்தரகர்கள் கைது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6007

  சமீபத்தில் வேளாங்கண்ணியிலிருந்து கள்ள படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற அகதி குடும்பத்தினர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை விசாரித்த போலீஸார், இலங்கைக்கு செல்ல உதவியாக செயல்பட்டு வந்த இடைத்தரகர்களின் விபரங்களை சேகரித்தனர்.

  வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியை சேர்ந்த நூர்முகமது(வயது54), நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வம் ( வயது 35), சென்னை வளசரவாக்கம் வேலன் நகரை சேர்ந்த விக்ரமசிங்கம் ( வயது 61), வேதாரண்யம் நாலுவேதபதி பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 47), சிவசங்கர் ஆகியோர் இலங்கைக்கு கள்ள படகில் செல்ல இடைத்தரகர்களாக இருப்பது தெரியவந்தது

  இதைத்தொடர்ந்து ஜெகத்மோகன் குடும்பத்தினரை சந்திக்க வேளாங்கண்ணிக்கு வந்த இடைத்தரகர்களான நூர்முகமது, செல்வம், விக்ரமசிங்கம், ரங்கநாதன் ஆகிய 4 பேரையும்  கைது செய்த போலீஸார்,  தலைமறைவாக உள்ள சிவசங்கரை  தேடி வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This