ஆபீஸ் வேலை வேண்டாம்… விவசாயமே நிம்மதி-சாதிக்கும் பட்டதாரி பெண்கள்

Forums Communities Farmers ஆபீஸ் வேலை வேண்டாம்… விவசாயமே நிம்மதி-சாதிக்கும் பட்டதாரி பெண்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5938

  விவசாயம் நலிவடைந்து வருவதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணம் இளைய தலைமுறை விவசாயத்தில் ஈடுபடாமல் இருப்பதுதான். விவசாயம் லாபகரமான தொழில் இல்லை; மிகுந்த உடல் உழைப்பை கோருகிற தொழில் என்ர பொதுப்புத்தியும் கருத்தும் பெரும்பாலனவர்களிடம் நிலவுகிறது. அதனாலேயே இளைஞர்கள் விவசாயம் செய்ய அச்சப்படுகின்றனர்.

  இந்நிலையில், மேல்மருவத்தூரை அடுத்துள்ள கீழ் மருவத்தூரில் பட்டம் பெற்ற இரு பெண்கள், ‘நாங்கள் தனியார் கம்பெனிக்கு வேலைக்குப்போக விரும்பவில்லை.  விவசாயம் செய்வதே  மகிழ்ச்சியைத் தருகிறது’ என்கிறார்கள். பி.காம் பட்டாதாரியான சந்தியாவும், பி.இ கம்யூட்டர் சயின்ஸ் பட்டாதரியான குணாவும்தான் அந்த அதிசய பெண்கள். ”ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போனா 15,000 சம்பளம் கிடைக்கும். எட்டு மணிநேரம் கட்டாயம் வேலைபார்க்கணும். ஆனா விவசாயத்துல அப்படி இல்ல. எங்க கழனி, எப்ப வேண்டுமனாலும் வேலைக்கு வரலாம். அதுமட்டுமில்லாம இது நாம நமக்காக பார்க்குற வேலை. விவசாயம் பார்க்கும் என் அப்பாவுக்கு நாங்க உதவி செய்தது போலவும் இருக்கும்” என்கிறார் சந்தியா.

   

  ”பி.இ படிச்சிட்டு விவசாயம் பாக்குறீயான்னு கேப்பாங்க. ஆனா நாம என்ன பண்றோம்னு உறுதியா இருந்தா அடுத்தவங்களப் பத்திக் கவலைப்பட வேண்டாம்” என்கிறார் குணா உறுதியுடன். தொடர்ந்தவர்,”நாங்க இப்போ கத்தரிக்காய், தர்பூசணி விவசாயம் சொட்டு நீர் பாசனமுறையில்செய்திட்டு வர்றோம். இதுக்காக தேசிய வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகள்கிட்ட பயிற்சிஎடுத்துகிட்டோம். விறபனையை பொருத்தவரை உற்பத்தி செய்யுற காய்கறிகள சென்னை தி.நகர் மார்க்கெட்டுக்குத்தான் அனுப்புறோம். அதுல ஒரு விவசாயிக்கு பெருசா லாபம் வராது. விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்கணும்னா அவங்க உற்பத்தி பண்ணுற பொருளுக்கு நல்ல சந்தையும் அவங்களே விலையை தீர்மானிக்கிற நிலையும் உருவாக வேண்டும்” என்கிறார்.

  நமது ஆசிரியர் எம்.ஜெ.பிரபு கண்ட நேர்காணலே இக்கட்டுரை!

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This