ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவிட்டது மக்கள் அதிகாரம் அமைப்பினர் என்று சில மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற சமூக விரோத அமைப்புகள் முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றார். பயங்கரவாதிகள் குறித்து கேள்வி கேட்காத தி.மு.க. தான் தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் மரணத்திற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.