மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனை நேற்று காலை சந்திப்பதற்காக இளைஞர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்தார். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் அவர் வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் நுழைந்த இளைஞர், திட்டக்குடியை சேர்ந்த சபரிநாதன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் திருவல்லிக்கேணியில் ஜூஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பிடிபட்ட நபரிடம் தேனாம் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.