அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை எதிர்கின்றனர். சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இதை தமிழக அரசு ஆதரிக்கிறது. சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழிற்சாலை பகுதிகளை மேன்படுத்தவும், கனரக வாகனங்கள் எளிதாக செல்ல விபத்துக்கள் இல்லாச் சாலைகள் அமைக்கப்படும். நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுதரப்படும் என்று சேலம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.