தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
1) வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் விளைவாக அடையாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுக்கையில் வெள்ள தணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நடப்பாண்டில் மாநில நிதியிலிருந்து 100கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2) அண்ணா நினைவிடத்தின் புனரமைப்பு பணிகளுக்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
3) சுதரந்திர பிரட்ட வீரர் திரு. ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 16ஆம் நாள் மற்றும், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
4) பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை 8ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, குடும்ப ஓய்வூதியத்தை 4750 ரூபாயிலிருந்து 5000 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
5) சுற்றுலா வாடிக்கையாளர்களை கவர சென்னை, கொல்கத்தா, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் செயல்பட்டுவரும் பூம்புகார் விற்பனை மையங்களை புதுப்பிக்க 1 கொடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
6) நடப்பாண்டு முதல் பூம்புகார் நிறுவனம் சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் உலக அளவிலான கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடத்தப்படும்.