வார இறுதியில் குழுவாக கிராமத்துக்கு சென்று விவசாயம் செய்யும் ஐடி இளைஞர்கள்

Forums Communities Farmers வார இறுதியில் குழுவாக கிராமத்துக்கு சென்று விவசாயம் செய்யும் ஐடி இளைஞர்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5746

  மாதச் சம்பளம் வாங்கும் ஐடி இளைஞர்கள் வார இறுதியில் என்ன செய்வார்கள்…? ஷாப்பிங், மால், சினிமா என்று நேரத்தை செலவு செய்வார்கள் என்பதுதான் பொதுவிதி. ஆனால் அந்த இலக்கணத்தை உடைத்து புதுமை செய்கிறார்கள் இந்த இளைஞர்கள். இவர்கள் ‘வீக் எண்ட் அக்ரிகல்சுரிஸ்ட்’ என்ற முகநூல் குரூப் ஆரம்பித்து பலர் ஒன்றிணைந்து ஒரு கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்கு வயலில் இறங்கி களை எடுத்தல், மருந்து அடித்தலென விவசாய வேலைகளைச் செய்கிறார்கள். நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை.

  இதுகுறித்து இந்த குரூப்பின் ஒருங்கிணைப்பாளர் சரத் சுந்தர் நமது ஆசிரியர் எம்.ஜெ.பிரபுவிடம்  கூறும் போது, 2013-ல் ஹரிஷ் என்பவர் இந்த வீக் எண்ட் அக்ரிகல்சுரிஸ்ட்’ என்னும் முகநூல் குழுவை ஒருங்கிணைத்தார். அதன் மிக முக்கிய நோக்கம், இளைஞர்கள் விவசாயத்தை விட்டு வெகுதூரம் சென்று விட்டார்கள். அவர்கள் விவசாயம் எந்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த குழுவில் ஐடியில் வேலை பார்க்கும் பல என்ஜினியர்கள் சேர்ந்தார்கள். அவர்கள் அனைவரையும் வார இறுதியில் பொன்னேரி அருகே இருக்கும் ஆலந்தூர் என்ற கிராமத்துக்கு அழைத்து வந்தோம்” என்றார்.

  உங்கள் வரவை விவசாயிகள் ஏற்ருக்கொண்டார்களா  என்றதுக்கு,” முதலில் கொஞ்சம்தயங்கினார்கள். ஆனால் தொடர்ந்து அக்கிராமத்துக்கு வர ஆரம்பித்ததும் நமக்காக வருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்கள். பிறகு அவர்களுடைய வயலில் இறங்கி வேலைபார்க்க ஆரம்பித்தோம்”’ என்றார்.

  இந்தக் குழுவில் இருக்கும் தமிழ்செல்வன் பி.இ பட்டதாரி, ஐடியில் வேலை பார்க்கிறார். அவர் கூறும்போது,” நான் முதன்முதலில் இங்கு வந்த போதுதான் விவசாயத்தில் இத்தநை சிரமங்கள் இருக்கிறதா என்பதை புரிந்துகொண்டேன். இப்போது சில நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். கிராமங்களில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. நாங்கள் இங்கு வந்து வார இறுதியில் வேலை பார்ப்பதால் ஒரு சிறு விவசாயிக்கு 3000ரூபாய் வரை மிச்சம் ஆகும். அவரைப் பொறுத்தவரை இது பெரிய தொகைதான். நாங்கள் இயற்கை விவசாயம்குறித்து இங்குள்ள விவசாயிகளிடம் எடுத்துக் கூறுகிறோம். விவசாயிகள் உடனே மாறாவிட்டாலும் கொஞ்சம்கொஞ்சமாக மாறி வருவது மகிழ்ச்சி. நாங்கள் தர்மபுரி, பொள்ளாச்சி என்று சென்று பல விவசாய வேலைகளைக் கற்று வருகிறோம். எதிர்காலத்தில் விவசாயம் செய்ய அது உதவிசெய்யும்” என்றார் சந்தோஷத்துடன்.

  ஆண்கள் மட்டுமில்லாது பெண்களும் இந்த குழுவில் இருக்கிறார்கள். ஜனனி பிகாம் படித்தஹ்வர்.” இங்கு வந்து வேலை செய்வது எனக்கு ஒரு பயிற்சியாக உள்ளது” என்கிறார். விவசாயத்தின் தேவையை இளைஞர்கள் புரிந்துகொண்டு வருவது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This