தூத்துக்குடி நாட்டுப்படகு, கட்டுமர மீனவர் சங்க தலைவர் கயாஸ் தலைமையில் 27 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது, தூத்துக்குடியில் பதிவு செய்யாத விசைப்படகுகள் கடலுக்கு செல்வதால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் பதிவு செய்யாத விசைப்படகுகள், 240 எச்.பி.க்கு அதிகமாக மோட்டார் திறன் கொண்ட விசைப்படகுகளை கடலுக்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.