காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேம்மேலி, பட்டிபுலம், தேவனேரி ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் கடல் நீர் வழக்கத்தை விட அதிகமாக ஊருக்குள் வரத் தொடங்கி உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக கடற்கரையோர கிராமங்களில் விசைப்படகு மற்றும் மோட்டார் படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அப்பகுதியில் மீன் வரத்து குறைந்துள்ளது.