உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நான்காவது முறையாக மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இரு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளதாலும் வார்டு வரையறை செய்யும் பணி நிறைவடையாததாலும் பதவி நீட்டிப்பு என்று தெரிவித்தார் உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி. பதவி நீட்டிப்புக்கான சட்டமுன்வடிவை குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமசோதாக தாக்கல் செய்தார் . ஆளும்கட்சி எம்.எல்.ஏ க்கள் 115 பேர் சாதகமாக வாக்களித்தனர். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் 97 பேர் எதிராக வாக்களித்து எதிர்ப்பை தெரிவித்தனர். தேர்தல் நடக்காததால் வளர்ச்சி பணிகள் நிலுவையில் உள்ளதாகவும், பணிகளில் துளிவு ஏற்படும் என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், உச்சநீதிமன்றம் மறுவரையை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தபொழுது, அலுவலர்களின் பனிக்காலத்தை நீடிப்பது எதிரானது என்று கேள்வி எழுப்பினார்.