ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்று வைகோவுக்கு தமிழக அரசு கடிதம்

Forums Inmathi News ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்று வைகோவுக்கு தமிழக அரசு கடிதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5663
    Kalyanaraman M
    Keymaster

    ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்று வைகோவுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

    ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க
    வேண்டும் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்திருந்தார்.
    இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டச் சுற்றுப்புறச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், வைகோவிற்கு எழுதியுள்ள கடிததில் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தினர், தங்களது உரிமத்தைப்
    புதுப்பிக்கக் கோரி அளித்து இருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு மாசு
    கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018 அன்று ஏற்க மறுத்ததுடன், ஆலையை இயக்கக்
    கூடாது என, 12.04.2018 அன்று ஆணை பிறப்பித்தது. அதைச்
    செயல்படுத்துவதற்கான நடைமுறைகளையும், மின் இணைப்பைத் துண்டித்தும்,
    23.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 24.05.2018 அன்று, மின்
    இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு
    ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, 28.05.2018 அன்று ஆலைக்கு சீல்
    வைக்கப்பட்டது என்று எழுதியுள்ளர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This