கன்னியாகுமரியில் சங்கிலித்துறைப் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரியோதயம் பார்க்க வந்திருந்தனர். அப்போது, விவேகானந்தர் மண்டபம் -திருவள்ளுவர் சிலைக்கு இடையிலான கடற்பகுதியில் ஒருவர் தத்தளித்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். இது பற்றி, அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, கடலோர பாதுகாப்புபடைபோலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர்.
அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நபரை மீட்க முயற்சி மேற்கொண்டனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்த பாறையின் மீது ஏறினார். உடனே போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், அவரிடம் விசாரித்ததில், அவர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் என்ற 43 வயது மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரியவந்தது.