தென்மாவட்டங்களில் 14 அடி உயரத்திற்கு அலை : இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை

Forums Communities Fishermen தென்மாவட்டங்களில் 14 அடி உயரத்திற்கு அலை : இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5633

    தென் மாவட்ட கடல் பகுதிகளில்  14 அடி உயரத்திற்கு பெரிய அளவில் அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்திய கடல் தகவல் சேவை மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தென் தமிழக கடலில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 10 முதல் 14 அடி உயரத்திற்கு  அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (28ம் தேதி) நள்ளிரவு வரை இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This