கன்னியாகுமரில், விரைவில் நவீன மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் , காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசினார். அப்போது,திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி குறுக்கிட்டு பேசும் போது; அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், வானிலை அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வானொலி , தொலைக்காட்சிகள் போடுகின்றனர். இங்கும், எப்.எம் ரேடியோ உள்ளிட்டவைகளில் வானிலை அறிக்கையை போடலாம் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்; இதற்காக தனித்துறையை வைத்து, 13 கடலோர மாவட்டங்கள், வட்ட அளவிற்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நவீன கருவிகள் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க, நவீன கருவிகள் உள்ளன. ஆனால்,அவர்கள், அவற்றை பதிவு செய்வதில்லை போன்ற சிக்கல்கள் உள்ளன.
இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்; புயலுக்கு பிறகு, கன்னியாகுமரியை சீரமைத்து, பிரேதயகமாக ஒருங்கிணைத்து, நவீன மீன் பிடி துறைமுகம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றனர். ஆனால், எந்த தொகுதியில் அது, அமையை உள்ளது என இப்போது சொல்ல மாட்டோம். மேலும், ரூ.116 கோடியில், கடல் அரிப்பை தடுக்கும் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.