பேரிடர் சிறப்பு படை, மற்றும் பல சட்டசபை செய்திகள்

Forums Inmathi News பேரிடர் சிறப்பு படை, மற்றும் பல சட்டசபை செய்திகள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5610
  Kalyanaraman M
  Keymaster

  பேரிடர் காலங்களில்  தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்திட பேரிடர் உதவிப்படை என்ற சிறப்பு படை உருவாக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமா் அறிவித்தார்.

  சட்டசபையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியகோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளித்து பேசும்போது, அறிவித்த அறிவிப்புகள் வருமாறு:-

  மடி கணினி 423 கிராம நிருவாக அலுவலர்களுக்கு மடிகணினி அச்சுப்பொறி, பேட்டா கார்டு மற்றும் கணினி இயக்கப்பயிற்சி வழக்கப்படும்.

  சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு ஒருங்கிணைந்த வட்டாச்சியர் அலுவலக கட்டிடம் கட்டப்படும்.

  வருவாய் அலுவலர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய சிம்கார்டு வழங்கப்படும். கிராம அளவில் இருந்து மாவட்ட அளவு வரை வருவாய் துறையில் பதிவு செய்யப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறும் வகையில் தகவல் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும்.

  பாதுகாப்பு திட்டம்
  சமூக பாதுகாப்புத் திட்டத்தில் மொபையில் ஆப் மற்றும் இணைய வழி  தகவல் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்படும். சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு ஆவனங்கள் அனைத்தையும் கணினிமயமாக்கப்படும்.

  இடி மற்றும் மின்னல் குறித்த முன்னெச்சரிக்கை வழங்கும் முன்னோடி திட்டம் உருவாக்கப்படும். தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்திட பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்க விண்ணப்பங்களை இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

  வெடி மருந்து
  வெடி மருந்து பொருட்கள் சேமிக்க உரிமம் மற்றும் பெட்ரோலியம் சட்டம் தொடர்பான தடையில்லாச் சான்றிதழ் பெற மின்னணு மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

  ஆதரவற்ற விதையர், ஆதரவற்ற குழந்தைகள் சான்றிதழ் மற்றும் துயர் துடைப்பு திட்டங்களுக்கான நிவாரண நிதி உதவி பெற இ- சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  குறைதீர் கூட்டம்
  மாற்றுத் திறனுடையோர் தேவைகளை பூர்த்தி செய்யவதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும். பேரிடர் காலங்களில்  தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்திட பேரிடர் உதவிப்படை என்ற சிறப்பு படை கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் அடங்கிய மாவட்டங்கமில் உருவாக்கப்படும்.

  மீனவர்களுக்கு வானிலை குறித்த முன்னெச்சரிக்கை தகவல் சாதனங்கள் வழங்கப்படும். சென்னை மாவட்டத்திற்கான வெள்ள முன்னறிவிப்பு திட்டம் உருவாக்கப்படும்.

  பதவி உயர்வு
  அருகருகே உள்ள மாவட்டங்களை மண்டலங்களாக ஒருங்கிணைத்து தகுதியுள்ள கிராம உதவியாளர்களுக்கு கிராம நிருவாக அலுவர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.

  இவ்வாறு அமைச்சர் உதயக்குமார் அறிவிப்புகளை அறிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This