- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by
Kalyanaraman M.
-
AuthorPosts
-
June 27, 2018 at 7:08 pm #5608
Kalyanaraman M
Keymasterகவர்னர் ஆய்வு குறித்து முதல்வர் விளக்கம் அளிக்காததை கண்டித்து சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும்,எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு செய்திவெளியிடப்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் பத்திரிகைகளில் விரிவாக வந்திருக்கிறது. நான் விரிவாகஅதை எடுத்துச்சொல்லி நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை, சுருக்கமாக சொல்லுகிறேன். கவர்னர் மாளிகை வெளியிட்ட, செய்தியில், மாவட்டங்களில்அதிகாரிகளுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறுதலைமைச் செயலாளரையும், வருவாய் நிர்வாகஆணையரையும் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டிருக்கிறது.
மாநில கவர்னரின் ஆய்வுகள் பொறுத்தவரை அரசின்சார்பில் அளிக்கப்பட்டிருக்கக்கூடிய விளக்கங்களிலோமுதலமைச்சருடைய விளக்கத்திலோ கவர்னர் அரசிடம்அனுமதி கேட்டுத்தான் இந்த கூட்டங்களை நடத்துகிறார்என்ற செய்திகள் இதுவரை வெளிவரவில்லை.
ஆனால், கவர்னர், தலைமைச் செயலாளரிடமே நேரில்கூட்டத்தை ஏற்பாடு செய்ய அனுமதி கேட்டிருக்கிறார் என்று,மாநில அரசு ஏன் இதுவரை பொதுமக்களுக்கு இதைவெளிப்படுத்தாமல் இருக்கிறது என்பது தான்கேள்விக்குறியாக இருக்கிறது.
முதலமைச்சருக்கே தெரியாமல் தலைமைச் செயலாளரும்,வருவாய் நிர்வாகத் துறை ஆணையரும் நேரடியாக ஆளுநருடைய உத்தரவுப்படி செயல்பட்டுக்கொண்டுஇருக்கிறார்களா?. இது மாநில சுயாட்சி கொள்கைக்குநேரடியாக விடுக்கப்பட்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாகஅமைந்திருக்கிறது. எனவே, இதுகுறித்து முதலமைச்சர்விளக்கம் சொல்ல வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டப்பேரவைத் தலைவர்தனபால், கவர்னர் அரசிலமைப்பு சட்டத்தின் படிஅதிகாரிகளுக்கு தகவல் அளித்துவிட்டு சுற்றுப்பயணம்செல்ல அனுமதி இருக்கிறது.
தலைமைச்செயலாளர், வருவாய்த்துறை நிர்வாகத்துறைஆணையர், மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிப்பதும், அவர்கள்தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கான சாதாரணவிஷயம். எனவே விவாதமாக்க வேண்டாம்.
அதனைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு ஏதும் நடத்தவில்லை என்றுகவர்னர் மாளிகையில் இருந்து செய்தி வருகிறது. ஆனால்இன்று(நேற்று) தலைமைச் செயலாளருக்கு தகவல்தெரிவித்துவிட்டு ஆய்வு நடத்துகிறோம் என்று செய்திவருகிறது. அதனால், தான் இந்த கேள்வியை நான்கேட்கிறேன்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவைத் தலைவர் தனபால்,கவர்னரின் சுற்றுப்பயணத்தை விவாத பொருளாக்கவேண்டாம். மகாராஷ்டிரா அட்வகேட் ஜெனரல் எழுதியகடித்தின் அடிப்படையில் தான். எனவே இதனைவிவாதப்பொருளாகக்க வேண்டாம்’ என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், கவர்னரின்அறிக்கையிலே தெளிவாக கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யுங்கள் என சொல்லப்பட்டிருக்கிறது. எனவே,இதுகுறித்த விளக்கத்தை முதலமைச்சரிடத்திலும் நான்எதிர்பார்த்தேன், முதலமைச்சர் இதற்கு எதற்கும் பதில்சொல்ல தயாராக இல்லாத காரணத்தால், அதை நாங்கள்கடுமையாக கண்டித்து தி.மு.க. வெளி நடப்பு செய்கிறோம் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள்வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கவர்னரின் ஆய்வு குறித்து பேசமுயன்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதிஅளிக்காததால் வெளிநடப்பு செய்தனர்.
-
This topic was modified 2 years, 6 months ago by
Kalyanaraman M.
-
This topic was modified 2 years, 6 months ago by
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.