கிமு கிபீ முரையை மாற்றியதற்கு ரவிக்குமார் வரவேற்பு

Forums Inmathi News கிமு கிபீ முரையை மாற்றியதற்கு ரவிக்குமார் வரவேற்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5592

  முன்னாள் எம்எஏ விசிக தலைவர் ரவிக்குமாரின் அறிக்கை:

  வரலாற்றைக் குறிப்பிடும்போது ஏசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்து BC, AD – கிமு, கிபி என்று குறிப்பிடும் வழக்கம் மதச்சார்பின்மைக்குப் புறம்பானதாக இருப்பதால் அது கைவிடப்பட்டு BCE, CE – பொது ஊழிக்கு முன், பொது ஊழி எனக் குறிப்பிடும் வழக்கம் உலக அளவில் பின்பற்றப்படுகிறது. எனவே வரலாற்று நூல்களில் கிமு, கிபி என்பதற்கு பதிலாக பொஊமு, பொஊ எனக் குறிப்பிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் எம்.எல்.ஏ வாக இருந்தபோது 02.09.2006 அன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தேன். அது இப்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. தற்போது புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள பாடநூலில் கிமு , கிபிக்குப் பதிலாக பொது ஆண்டு, பொது ஆண்டுக்கு முன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள திரு உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கு நன்றி.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This