ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக் கொலை

Forums Inmathi News ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக் கொலை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5588
  Kalyanaraman M
  Keymaster

  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான திருப்பூர் தொழிலதிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

  திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில் நடத்தி வந்த சிவமூர்த்தி, கடந்த 25-ம் தேதி முதல் காணவில்லை என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆம்பூர் அருகே வெங்கிளி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சொகுசு காருடன் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

  3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி என்பதும், தனது நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணுடன் சிவமூர்த்திக்கு தொடர்பு இருந்ததால், அந்தப் பெண்ணின் கணவரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  Source : Puthiyathalaimurai TV

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This