கோழி எச்சத்தில் மின்சாரம் தயாரிக்கும் சாலை பிரகாசம்!

Forums Communities Farmers கோழி எச்சத்தில் மின்சாரம் தயாரிக்கும் சாலை பிரகாசம்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5557

  மாற்று எரிசக்தி குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் மிகக் குறைவே. மாட்டு சாணியிலிருந்து பயோகேஸ் தயாரிக்க முடியும் என்பதை கடந்த  கால் நூற்றாண்டுகளாகத்தான் மக்கள் நடைமுறையில் உணர ஆரம்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், கழிவுகளில் இருந்து மின்சாரம்  தயாரிக்க முடியும் என்று நிரூபித்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறார் ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சாலை சிவபிரகாசம்.

  சாலை சிவபிரகாசத்திடம் நமது ஆசிரியர் எம்.ஜெ.பிரபு கண்ட நேர்காணலில் இருந்து….

  ”நான் என்னுடைய இளநிலை அறிவியலை சென்னையில் படித்தேன். பின்பு லண்டனுக்கு சென்று அங்கு renewable energy  குறித்து படித்தேன்.நான் படித்து கல்வி என் நாட்டுக்கு பயன்பட வேண்டுமென்று நினைத்து என் ஊரிலேயே கோழி எச்சத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஒரு தொழிற்சாலையை  அமைத்தேன். என் தந்தை கோழிப் பண்ணை வைத்து நடத்துகிறார். அதில் கிடைக்கும் கோழி எச்சத்தையும் அருகில் இருக்கும் சர்க்கரை ஆலைக் கழிவுகள், பால்பண்ணைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கிறேன்

  இந்தக் கழிவுகளில் இருந்து ஒரு நாளைக்கு 4 மெஹாவாட் மின்சாரம்கிடைக்கிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் விற்றுவிடுகிறேன். மொத்தமாக ஒரு நாளைக்கு 80,000 யூனிட் மின்சாரத்தை, மின்சார வாரியத்துக்குக் கொடுக்கிறோம்.  எங்கள் திட்டத்தை அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டுகிறார்கள்;ஊக்கப்படுத்துகிறார்கள்.

  காரணம் கழிவுகள் மேலாண்மை என்பது இன்றைக்கு அரசுக்கு மிகப் பெரிய சவாலான விஷயம். அந்த கழிவிலிருந்து ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதுதான் நித நிமிடத்தின் தேவை. நாங்கள் ஒரு நாளைக்கு 300 டன் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தாரிக்கிறோம்.இந்த கழிவில் இருந்து உற்பத்தியாகும் கிரின் ஹவுஸ் வாயுவிலிருந்து மின்சாரம் உருவாகிறது. கிரின் ஹவுஸ் வாயுதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த தொழில்நுட்பம் உள்ளது.

  ஜெர்மனியில் இருந்து பெறப்படட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். அந்த தொழில்நுட்பம் குறித்து  எங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி  கொடுத்துள்ளோம். எந்த நேரத்தில் பழுது ஏற்பட்டாலும் அதஹ்னை சரி செய்யும் அளவுக்கு எங்கள் ஊழியர்கள் திறமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள்” என்று பெருமையுடன் கூறுகிறார் சாலை பிரகாசம்.

  சாலை பிரகாசத்தை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

  டி.சாலைபிரகாசம்,

  சுபஶ்ரீ பயோ எனர்ஜிஸ் (பி)  லிமிடேட்,

  67,கவுண்டம்பாளையம்,

  திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். அலைபேசி எண்: 0944344737

   

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This