விதிகளுக்கு மாறாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை

Forums Inmathi News விதிகளுக்கு மாறாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5538
  Kalyanaraman M
  Keymaster

  சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராமசாமி பங்கேற்று பேசுகையில், மணல் குறித்து பேசினார்.

  அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

  விதிகளுக்கு…

  தமிழக அரசு விதிகளுக்கு மாறாக மணல் அள்ளுப்படுவதை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது, அதற்கெல்லாம் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்றெல்லாம் நான் தெளிவாக சொல்லியிருக்கின்றேன்.

  கடந்த காலத்திலே தி.மு.க. ஆட்சியிலே விதிகளுக்கு மாறாக மணல் அள்ளுபவர்களிடமிருந்து எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டது, அ.தி.மு.க. அரசு  ஆட்சிக்கு வந்த பிறகு விதிகளுக்கு மாறாக மணல் அள்ளுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  மணல் அல்ல…

  இன்றைக்கு அரசாங்கத்தால் பல்வேறு வழியிலே இது தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், ஆங்காங்கே சில நடந்து கொண்டிருக்கின்றது.  அதை தடுப்பதற்குண்டான வழிமுறைகளை அரசு செய்து கொண்டிருக்கின்றது.

  மணலை பொறுத்தவரைக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.  அந் த கட்டுப்பாட்டிற்குள் தான் மணலை அள்ளவேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.  ஏற்கனவே, மணல் அள்ளியிருந்தால், அந்த இடத்தில் மணல் அள்ள முடியாது, குறிப்பிட்ட அளவுதான் அள்ளவேண்டும்.  அதற்கு இடைவெளி இருக்கவேண்டும், பாதை இருக்கவேண்டும், இவ்வளவு பிரச்சினை இருக்கிறது.

  மணல் குவாரி

  ஆகவே, புதிதாக குவாரி திறக்கப்பட்டாலும் கூட, விதிமுறைக்குட்பட்டு தான் அந்த குவாரியை திறக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினாலே, நிறைய வழக்குமன்றத்திற்கு, நீதிமன்றத்திற்கு சென்று விடுகிறார்கள். அதன் காரணமாக காலதாமதம் ஏற்படுகின்றது.

  ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும், அதிகமான குவாரிகள் திறக்கப்பட்டு, குறைந்த விலையில், நியாயமான முறையிலே பொது மக்களுக்கு, கட்டுமான தொழிலுக்கு மணல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  நடவடிக்கை

  விதிகளுக்கு மாறாக மணல் அள்ளப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் காவல் துறையும், வருவாய் துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

  நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தான் படிப்படியாக மணல் உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும் என்ற நிலையிலே அரசு இருக்கின்றது. அதற்குத்தான் எம்ஸாண்டை பயன்படுத்தவேண்டும் என்று பொதுமக்களிடத்திலே வேண்டுகோளாக வைக்கப்படுகின்றது, அவர்களுக்கு விழப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

  மணல் அள்ள…

  இன்றைக்குக் கூட, திருவள்ளூர் பகுதியில் மணல் குவாரி துவங்கியவுடனேயே அங்கே ஒரு போராட்டம் நடத்துகின்றார்கள். இப்படி பல்வேறு இடங்களிலே மணல் குவாரிகள் துவங்குகின்றபொழுது, விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்துகின்றார்கள்.

  ஆகவே, அதையெல்லாம் கருத்திலே கொண்டு, எங்கே மணல் அதிகமாக இருக்கின்றதோ, அங்கே மணல் அள்ளுவதற்கு தேவையான குவாரிகளை துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

  வெளிநாட்டு மணல்

  இருந்தாலும், விவசாயிகள் பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினாலே, அவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு ஒரு சமாதானத்தை ஏற்படுத்தி, அங்கே எவ்வளவு மணல் இருக்கிறது என்று கணக்கிட்டு அதற்கேற்றவாறு, அந்த குவாரிகளில் மணல் அள்ளி பொதுமக்களுக்கும், கட்டுமான தொழிலுக்கும் இயன்ற அளவு அரசால் வழங்கப்பட்டிருக்கின்றது .

  அது மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஒப்பந்தம் கோரப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றது .

  இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This