செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் 60 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த “சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துக்கொண்டார். அங்கு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.