தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 245 விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. இதில் 20 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள 163 படகுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக தெரிகிறது.
இந்த படகுகள் கடந்த 10 மாதங்களாக கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படகுகளை மத்திய கப்பல் துறை உதவியுடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவு அடிப்படையில் விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளை பதிவு செய்ய வேண்டும். தடைக்காலம் முடிந்த பிறகு தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு 24 மீட்டர் நீளம், 240 எச்.பி. மோட்டார் திறன் கொண்ட விசைப்படகுகளை பதிவு செய்ய அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட 91 விசைப்படகுகள் உள்பட 177 படகுகள் காலையில் கடலுக்கு சென்றன.