சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Forums Communities Fishermen சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5499

    தடை செய்யப்பட்ட சுருக்குமடி வைத்து மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    பாம்பன் புனித சவேரியார் கரைக்கடல் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் மெர்வின், செயலாளர் ஆரோக்கியம்  ஆகியோர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் உள்ள விவரம் பின்வருமாறு :

    பாம்பன் தெற்குவாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வைத்து மீன்பிடித்து மீன் வளத்தை அழிக்கக்கூடிய நடவடிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் மீன்வளம் அழிவதோடு ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும்.

    இதுபோல சுருக்குமடி வைத்து மீன்பிடிப்பவர்கள் அதிக குதிரைத்திறன் கொண்ட எந்திரங்களை பயன்படுத்தியும், 80 அடி நீளம் வரை பைபர் படகுகளை பயன்படுத்தியும் மீன்வளத்தை அழிக்கின்றனர். சுருக்குமடி வைத்து மீன்பிடிப்பவர்கள் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மீன்துறையினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This