மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், செயலாளர், மற்ரும் உறுப்பினர்கள் கொண்ட 9 பேர் குழுவை அறிவித்தது. கர்நாடக மாநிலம் அதன் உறுப்பினரை அறிவிக்காத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதி நீர் பங்கீட்டில் முடிவு எடுக்கும் என்பது குறிப்பிடத்தகக்து. இந்நிலையில், கர்நாடக முதல்வர் இன்று மதியம் அம்மாநில தலைமைச் செயலர், தலைமை வழக்குறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின்பு, கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக உறுப்பினராக பிரசன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளானர் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.