சென்னை தியாகராய நகரில் பாமக- பாஜக தொண்டர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்து பாஜக அலுவலகம் நோக்கி பாமக பேரணி சென்றபோது இந்த மோதல் ஏற்பட்டது. பாமக- பாஜக தொண்டர்கள் சென்னை தியாகராய சாலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.*</p>
*பாஜக- பாமக மோதலின் போது சென்னை தியாகராய நகரில் இருந்த பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பேரணியாக வந்த பாமக-வினர் 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.*
*முன்னதாக தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் அய்யா என்று தான் மரியாதையுடன் அழைக்க என் அய்யா சொல்லி வளர்ந்த எனக்கு தங்கள் பதிவில் உள்ள அய்யோ அய்யோ என நாகரீகமற்ற சொற்றொடர்களை கண்டதும், எங்களுக்கு இல்லாத பொது அறிவு தங்களுக்கு இருப்பதாக தாங்களே கூறிக்கொள்வது என்னை புல்லரிக்கவைக்கிறது நன்றி என ராமதாஸை விமர்சித்தார்.*
<p style=”text-align: left;”>*மேலும் என் அரசியல் அனுபவம் 20 ஆண்டு கால முழுநேர அரசியல் பணி. என் உழைப்புக்கு கட்சி வழங்கிய அங்கீகாரம்தான் நான் படிப்படியாகப்பெற்ற பதவிகள். வாரிசு என்று சொல்லி பதவியை வாரிச்சுருட்டவில்லை. பதில் சொல்வதிலும் நாகரீகம் வேண்டும் என்பது தங்களுக்கும் உங்களுக்கு ஆதரவாக பதிவிடுவோருக்கும் தேவை என அவர் கடுமையாக விமர்சித்தார். பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து தமிழிசை பதிவிட்டதை கண்டித்து பாமக-வினர் பேரணி சென்றது குறிப்பிடத்தக்கது.</p>