கடந்த சில நாட்களாக கபினி அணையில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கபினி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஆகையால் அணையின் பாதுகாப்பு கருதி, கர்நாடக அரசு காவிரில் நீர் திறந்துவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கபினி அணையிலிருந்து விநாடிக்கு 18, 148 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்தது. மேலும் மேட்டூர் அனையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.