குளச்சல் கடல் பகுதியில் சிப்பி எடுக்க சென்ற மேற்கு வங்க வாலிபர் கடலில் மாயம்

Forums Communities Fishermen குளச்சல் கடல் பகுதியில் சிப்பி எடுக்க சென்ற மேற்கு வங்க வாலிபர் கடலில் மாயம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5438
  Nandha Kumaran
  Participant

  குளச்சல் கடல் பகுதியில் சிப்பி எடுக்க சென்ற மேற்கு வங்க வாலிபரை கடல் இழுத்து சென்றுள்ளது.

  மேற்கு வங்க மாநிலம் பர்துவான் மாவட்டத்தை சேர்ந்த பர்ஹஜ் மாலிக் என்பவரது மகன் ஹசிப் மாலிக் (20) உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சுகித் விஸ்வகர்மா (25) ரஞ்சித் (20) , அஜய்மதேசியா (22) , ப னஜ்ரங்க பல்லி விஸ்வா கர்மா (22) ஆகிய 5 பேரும் அழகிய மண்டபத்தில் உள்ள  மரம் அறுக்கும் மில்லில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை  11.30 மணிக்கு அழகியமண்டபத்தில் இருந்து புறப்பட்டு வந்து மதியம் சுமார் 14.00 மணியளவில் மேற்படி 5 பேரும் , கன்னியாக்குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள அலெக்சாண்டர் குருசடி பாறை அருகே வந்து , மேற்படி பாறையில் சிப்பி எடுப்பதற்காக ஹசிப் மாலிக் சென்ற போது கடல் அலை வந்து இழுத்துச் சென்று காணாமல் போய்விட்டார் . உடன் இருந்த 4 பேரும் காப்பாற்ற முயற்சித்தும் முடியாமல் கடலில் மூழ்கியுள்ளார்.மீனவ மக்கள் உதவியுடன் தேடி பார்த்த்து கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போன ஹசிப் மாலிக்  அழகிய மண்டபத்தில் உள்ள மரமில்லில் கடந்த  9 மாதங்களாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This