குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் 1 முதல், ஜூலை 30 வரை மீன்பிடித் தடைக்காலம் நிலுவையில் இருந்து வருகிறது. இக்காலத்தில், உள்ளூர் மீனவர்கள் சிறிய கட்டுமரங்களில் சென்று மீன் பிடித்து வர தடையேதும் இல்லை. இந்நிலையில், கட்டுமரத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மற்ற மீன்களை விட நெத்திலி மீன்களே அதிகம் கிடைக்கிறது. இதனால் கடந்த வாரத்தில் 20 கிலோ கொண்ட குட்டை ஒன்றுக்கு 1500 ரூபாய் வரை இருந்த நெத்திலி மீன்கள் இந்த வாரம் ரூ. 650 ஆக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் நெத்திலி மீன்களை காயப்போட்டு கருவாடாக மாற்றி வருகின்றனர்.