உதான் திட்டத்தின் கீழ் நெய்வேலி மற்றும் ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைத்து தருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு கடிதம் எழுதினார். ஓசூர் விமான நிலையம் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கும் 150 கிமீ உள்ளே வருவதால் தடையில்லா சான்றிதழை விரைவில் பெற்று பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உதான் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் அறிவிதிருந்த தஞ்சாவூர், வேலூர் விமான நிலயங்களுடன் ராமநாதபுரத்திலும் விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். சேலத்தில் குறுகிய காலத்தில் விமான நிலையம் அமைத்து தந்ததற்கு நன்றியை தெரிவித்தார்.
Source : News7 Tamil