நாமக்கல்லில் ஆளுநர் வருகைக்கு கருப்பு கொடி காட்டிய திமுக வினர் கைது செய்ததை கண்டித்து சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உட்பட 197 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் 8வழி சாலை திட்டப்பணிகளை மக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் நிறைவேற்ற வேண்டும். அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணிகளை ஆளுநர் செய்வது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
Source:புதிய தலைமுறை.