பசுமைவழிச் சாலை: அன்புமணி ராமதாஸ் மக்களை சந்திக்கும் 8 இடங்கள் பட்டியல்!

Forums Inmathi News பசுமைவழிச் சாலை: அன்புமணி ராமதாஸ் மக்களை சந்திக்கும் 8 இடங்கள் பட்டியல்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5316
  Kalyanaraman M
  Keymaster

  தமிழகத்திற்கு எந்த வகையிலும் தேவையில்லாத சென்னை& சேலம் 8 வழி பசுமைச் சாலை என்ற பெயரில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் சுமார் 7000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதற்கான அளவீட்டுப் பணிகளை தொடங்கியுள்ளது. பசுமைச் சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவுக்கு, அவற்றையொட்டி உள்ள நிலங்களும் பயனற்றவையாகி விடும். மொத்தத்தில் இந்தத் திட்டத்தால் 15,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும். வளர்ச்சி என்ற பெயரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அரசு பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, வாழ்வாதாரங்களை பறிக்கும் எந்த திட்டமும் வளர்ச்சிக்கானதாக இருக்க முடியாது. அதனால் தான் சென்னை – சேலம் பசுமைச் சாலைத் திட்டத்திற்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சி, இதுகுறித்து பாதிக்கப்படும் மக்களிடம் மக்களிடம் கருத்துக் கேட்பதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

  மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கீழ்க்கண்ட விவரப்படி பொதுமக்களை சந்திக்கவுள்ளார்.

  மக்கள் சந்திப்பு – அட்டவணை

  நாள் – நேரம் – சந்திப்பு இடம் – மாவட்டம்

  1. 26.06.2018 காலை 10.00 மணி – உத்திரமேரூர், காஞ்சிபுரம்

  2. 26.06.2018 காலை 12.00 மணி – செய்யாறு, திருவண்ணாமலை

  3. 26.06.2018 பிற்பகல் 02.00 மணி – ராந்தம் (போளூர் அருகில்), திருவண்ணாமலை

  4. 26.06.2018 மாலை 04.30 மணி – மண்மலை (செங்கம் அருகில்), திருவண்ணாமலை

  5. 27.06.2018 காலை 10.00 மணி – நிலவாரப்பட்டி (சேலம் அருகில்), சேலம்

  6. 27.06.2018 காலை 12.00 மணி – அயோத்தியாப்பட்டினம், சேலம்

  7. 27.06.2018 பிற்பகல் 03.00 மணி – இருளப்பட்டி, (பாப்பிரெட்டிப்பட்டி அருகில்), தருமபுரி

  8. 27.06.2018 மாலை 04.30 மணி – முத்தானூர் (அரூர் அருகில்), தருமபுரி

  மேற்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெருமளவில் பங்கேற்பார்கள்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This