நெல்லுக்கு கொழுப்பைக் குறைக்கும் மருத்துவ குணம் உண்டு தெரியுமா? 

Forums Communities Farmers நெல்லுக்கு கொழுப்பைக் குறைக்கும் மருத்துவ குணம் உண்டு தெரியுமா? 

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5274

    நெல்லுக்கு கொழுப்பைக் குறைக்கும் மருத்துவ குணம் உண்டு தெரியுமா?

    நமக்கு எத்தனை  நெல் வகை  தெரியும்? சம்பா, சீரக சம்பா,பொன்னி என்று அரிசி கடைக்காரர் சொல்லும் சில வகைகள் தவிர்த்து வேறு எந்த வகை நெல்லும் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஏற்றவாறு பல்வேறு வைகையான நெற்பயிர்  விளைந்த பூமி இது. அதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நெல்லுக்கும் தனிப்பட்ட மருத்துவ குணம் உள்ளது. நெற்பயிரில் நீண்டகால நெற்பயிர், குறுகிய கால நெல் பயிர் என வகைகள் உண்டு. உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குறுகிய கால பயிரே அதிக அளவு பயிரிடப்படுகிறது.

    பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்து, பாதுகாத்து வரும் ஆர்வலர்களிடம் கிட்டத்தட்ட 173 வகையான நெல் உண்டு என்பது ஆச்சர்ய தகவல். அதில் ‘கொட்டார சம்பா’ என்ற நெல்லுக்கு கொழுப்பைக் குறைக்கும் மருத்துவ குணம் உள்ளது. இந்த வகை நெல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிகம் விளைந்திகிறது.

    கொட்டாரம் என்றால் அரண்மனை என்று பொருள்.  அரசர்களின் குடும்பத்துக்காகவே இந்த  கொட்டாரச் சம்பாவை பயிரிட்டுள்ளார்கள்.  இது நூற்றைம்பது நாட்கள் வளரக் கூடிய பயிர். ஐந்தடி வரை  வளரக் கூடியது

    கொட்டாரச் சம்பா நெல், குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. மேலும் இனிப்புச் சுவையுடைய இந்த நெல் கொழுப்புக் குறைக்கும் தன்மை உடையது.

    இந்த நெல்லை வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் பாரம்பரிய நெல் சேமிப்பு ஆர்வலர்களை அணுகலாம்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This