பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ரோட்டரி கிளப் கிழக்கும் இணைந்து நடத்திய விங்ஸ் டு பிளை என்ற அறிவியல் சாற் போட்டியில் வெற்றி பெற்ற 8 அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு 4.7.2018 முதல் 14.7.2018 வரை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இதற்காக மாணவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். இப்பயணத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு,எதிர்கால வாழ்வினை சிறப்பாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கடந்த ஆண்டு 7 மாணவ/மாணவியர்கள் ஜெர்மனி நாட்டிற்கும், அதற்கு முந்தைய ஆண்டு 7 மாணவ/மாணவியர்கள் மலேசியா நாட்டிற்கும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.